நோபல் பரிசு பெற்ற Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து HIV ஐ வெற்றிகரமாக அகற்ற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உடலிலிருந்து முழுவதுமாக வைரஸை அகற்ற முடியும், இருப்பினும் இது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை சரிபார்க்க இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
தற்போதுள்ள எச்.ஐ.வி மருந்துகள் வைரஸை கட்டுப்படுத்தலாம் ஆனால் அதை அகற்ற முடியாது.
நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்-செல் மற்றும் மரபணு சிகிச்சை தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியரான டாக்டர் ஜேம்ஸ் டிக்சன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்
“எதிர்கால சிகிச்சைக்காக முழு உடலிலும் இந்த செல் மதிப்பீடுகளின் முடிவுகளை நிரூபிக்க அதிக ஆய்வுகள் தேவைப்படும்,” என்று கூறியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇