இன்று உலகில் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் நோயாக பல் சொத்தை மாறிவிட்டது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சனத்தொகையில் 3.5 பில்லியன் பேர் பல் சொத்தை நிலையை எதிர்நோக்கி வருவதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலக பல் சுகாதார தினத்தை முன்னிட்டு 20.03.2024 அன்று சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனைத்து பல் நோய்களையும் தடுக்கலாம் என்றும், இது பொதுவானதாக இருக்க வேண்டியதில்லை என்றும் கூறிய வைத்தியர், அதிகப்படியான சீனி நுகர்வு, பல் துலக்காமல் இருப்பது, புளோரைடு பற்பசை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவைதான் பல் சொத்தை ஏற்படுவதற்கான பிரதான காரணிகள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇