Amcor Ngo நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தினால் செயற்கைமுறை சினைப்படுத்தல் பயிற்சி நெறியானது கடந்த 11.09.2023 தொடக்கம் 16.09.2023 வரை கல்லடி கால்நடை உற்பத்தி சுகாதார பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 13 இளைஞர்களுக்கு மாடுகளின் வகைகள், செயற்கை முறை சினைப்படுத்தல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விடயங்கள் கற்றுக்கொடுக்கப் பட்டதுடன் பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் M.A.ஹாதி, அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ப.முரளிதரன், பயிற்சி ஒழுங்கமைப்பாளரும், அரச கால்நடை வைத்தியருமான R.சுபாசுகி,, மற்றும் அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன், கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு பயிற்சி பெற்ற 13 செயற்கைமுறை சினைப்படுத்தல் தொழில்நுட்பவியலாளர்களும் கால்நடை சுகாதாரப் பிரிவுகளில் பதிவு செய்து 25 சினைப்படுத்தல் அனுபவங்களைப் பெற்ற பின்னர் அதற்கான அனுமதி இலக்கத்தினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அம்கோர் நிறுவனமானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் இளைஞர்/ யுவதிகளுக்கான பல்வேறு தொழிற்திறன் விருத்தி தொடர்பான பல்வேறு பயிற்சிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.