இலங்கை கைத்தொழில் அமைச்சினால் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த இயக்குநர் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான ‘சுயம்’ எனும் சிங்கள குறும்படம் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தைப் பிடித்து தேசிய மட்டத்திலான விருதினைப் பெற்றுள்ளது.
இக்குறும்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் K.சுகுமாரன், L.துஷியந்தன், M.ஜதிஜன் ஆகியோர் நடித்துள்ளதுடன் இதற்கான கலை இயக்கத்தினை, M.பிரதிஜனும், ஆங்கில மொழி மாற்றத்தினை K.அகலிகாவும், சிங்கள மொழிமாற்றத்தினை புஷ்பலட்சுமியும் மேற்கொண்டுள்ளதுடன் உதவி இயக்குநர்களாக ஜதிஜன் மற்றும், M.பிரதிஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
மேலும் sfx, ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம், இசை போன்றவற்றை இயக்குநர் கிஷாந்த் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
22-03-2024 அன்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட முதலாவது ‘சிங்கள மொழி’ குறும்படம் என்ற பெருமையை சுயம் குறும்படம் பெற்றுள்ளதாக இயக்குநர் கிஷாந்த் எனத் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇