நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (29.10.2024) தெஹிவளை நகரில் அமல்படுத்தப்படவுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு 5 தேங்காய்களும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு 10 தேங்காய்களும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇