காலி,கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காலி,கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் 16.09.2025 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (கல்வி சேவைகள்) கமல் ஆரியசிங்க, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய அதிபர் திலிப் குமார உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு மாணவர்களுக்கு பாராளுமன்றப் பொறிமுறை தொடர்பான நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், ஜனாதிபதி செயலகம், இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் செயற்திட்டத்தின் மேலும் ஒரு செயற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற செயல்முறை மற்றும் அதன் வகிபாகம் குறித்து விளக்கியதுடன், பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

இந்நாட்டின் வரலாற்றுப் பெறுமதி மிக்க பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் இருந்து இந்த தலைமைத்துவ அனுபவத்தைப் பெற்று இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் பங்களிப்புச் செய்யும் ஜனாதிபதியின் செயலாளர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் செயலாளர் நாயகம் நன்றி தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற பிரதிக் குழுத் தலைவர் ஹேமாலி வீரசேகர, ஜனநாயக முறைமையில் சட்டத்தையும் மற்றவர்களையும் மதிக்கும், அவர்களுக்குச் செவிசாய்க்கும் தலைவர்களை உருவாக்க மாணவர் பாராளுமன்றம் உதவும் என்று தெரிவித்தார். சவால்களை எதிர்கொண்டு மேலும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை காண இந்த மாணவர் தலைவர்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு, கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பிக்கப்பட்டு சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார். பின்னர், பிரதமர் உட்பட அமைச்சரவை மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. மாணவர் பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அமைச்சுகளால் செயல்படுத்த முன்மொழியப்பட்ட திட்டங்களை அவையில் விளக்கினர்.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects