மட்டு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

அதன் பிரகாரம், குறித்த சங்கம் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மாவட்டத்தின் சமூக மேம்பாடு மற்றும் இன நல்லுறவை ஏற்படுத்தல் போன்ற சமூகம் சார் நல திட்டங்களை அமுல்படுத்தி வரும் நிலையில் மேலும் தமது சேவையினை விரிவுபடுத்தி மக்கள் தம்மிடம் இலகுவாக சேவையினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு நகரில் அமையப்பெற்றுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் மேல் தளத்தில் 03.09.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோரும் விசேட அதிதிகளாகவும் மற்றும் மாநகர சபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், அகில இலங்கை சமாதான நீதிவானும் பிரபல தொழிலதிபருமாகிய பீ.நல்லரெத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு, சமாதான நீதிவான்கள், சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதான இணைப்பாளர்கள், பிரதேச இணைப்பாளர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, பிரதான இணைப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்பின் பிரதேச இணைப்பாளர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அமைப்பினால் வழங்கப்படும் அடையாள அட்டை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளுக்கு குறிப்பாக (2025) ஒத்துழைப்பு வழங்கிய நிர்வாக சபை உறுப்பினர்களான என்.நவதாசன், ஜனாப் அகமட் சின்னலெவ்வை ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், சங்கத்தின் வளர்ச்சிப்பாதைக்கு உதவியினை வழங்கிவரும் பிரபல தொழிலதிபரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய பீ.நல்லரெத்தினம், அமைப்பின் உபதலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects