இலங்கையில் வணிக ரீதியாகப் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் புதிய “பன்றி வளர்ப்பு காப்புறுதித் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வணிக ரீதியாகப் பன்றி வளர்ப்புப் பண்ணைகளை நடத்துவோர், தமது இனப்பெருக்க விலங்குகளுக்காக இக்காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளலாம் என விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.
குறிப்பாக, 06 மாதங்கள் முதல் 04 வருடங்கள் மற்றும் 06 மாதங்கள் வரையான வயதுடைய இனப்பெருக்கப் பன்றிகளுக்கு இக்காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
ஒரு இனப்பெருக்க விலங்கின் அதிகபட்ச பெறுமதியான 200,000 ரூபா வரை அல்லது உற்பத்திச் செலவின் அடிப்படையில் இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்பாராத விபத்துக்கள் அல்லது நோய்களினால் ஏற்படும் மரணங்களுக்கு மாத்திரம் இக்காப்புறுதி ஊடாக இழப்பீடு கோர முடியும்.
இக்காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளும் பண்ணையாளர்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘உயிரியல் பாதுகாப்பு’ நடைமுறைகளைப் பின்பற்றிப் பண்ணைகளைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கால்நடைத் துறையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சுதெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










