நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9,764 குடும்பங்களைச் சேர்ந்த 36,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் 1,847 குடும்பங்களைச் சேர்ந்த 7,292 பேர் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரம், றைகம் கீழ் பிரிவு தோட்டத்தில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 271 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உறவினர்கள் மற்றும் ஆலய பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇