35 வருடங்களுக்கு பின்னர் யாழ்.காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை 08.06.2025 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு Clean Sri Lanka திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் ரயில் நிலைய வாசிகசாலையும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், புகையிரத நிலைய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










