2022 – 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டொன் கீரி சம்பா அரிசி அறுவடை செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் தற்போது நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் அதனை விற்பனை செய்யும் சங்கத்தினராலே தற்போது செயற்கையான தட்டுப்பாட்டு நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கீரி சம்பா அரிசி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி வகை, அதனை இறக்குமதி செய்வது சாத்தியமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇