ஒவ்வொரு நாட்டிற்கும் வறுமை ஒரு பெரிய பிரச்சினையாகும், மேலும் உலகின் பல நாடுகள் அதனுடன் போராடி வருகின்றன. அந்த வரிசையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
வறுமையின் வலியைப் புரிந்து கொள்ள, புருண்டியின் நிலைமையை நாம் பார்க்க வேண்டும். உலகின் ஏழை நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது.
இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. ஒரு காலத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டன. இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, பொருளாதார நிலை நன்றாக இருந்தது, ஆனால் 1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. ஒரு புருண்டியில் 1996 முதல் 2005 வரை நடந்த பெரும் இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது. அதோடு அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது. மெல்ல மெல்ல இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.
சராசரி ஆண்டு வருமானம் இங்கு வெறும் ரூ 23,000 (277 டொலர்கள்) தான். இங்கு சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஏழு, எட்டு குழந்தைகள் உண்டு. இதனால் உலகிலேயே குழந்தையாக இருக்க மிக மோசமான நாடு எனவும், உலகிலேயே மிக அதிருப்தியாக இருக்கும் மக்களைக் கொண்ட நாடு எனவும் புருண்டி தேர்வாகியுள்ளது.
நாட்டில் 80% வேலைவாய்ப்புகள் விவசாயத்தின் மூலம்தான் கிடைக்கிறது. நாட்டில் மூன்றில் ஒருவருக்கு வேலை இல்லை. அப்படியே வேலை கிடைத்தாலும் வருமானம் இருபதாயிரம் வரை தான். இது மாத வருமானம் அல்ல. ஆண்டு வருமானம் ஆகும்.
இப்படி கொடூர வறுமை இருக்கும் நாட்டிலும் பணக்காரர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
அதன் தலைநகர் புஜும்பராவில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஒன்று உள்ளது. அனைத்து வீடுகளிலும் மிக பிரமாண்டமாக கேட்கள் பூட்டப்பட்டு தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதியாக ஐரோப்பா, அமெரிக்காவின் மேட்டுக்குடி நகர்ப்பகுதிகள் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇