கோறளைப்பற்று பிரதேச செயலக 2024 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் பிரதேசமட்ட சிறுவர் மகளிர் அபிவிருத்திக்குழுக் கூட்டமானது நிர்வாக உத்தியோகத்தர் திருமதி புனிதநாயகி தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் காலாண்டில் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பாக துறைசார் உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தியதுடன் ஏனைய திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்குற்பட்ட விடயப்பரப்பு தொடர்பாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரச அரசசார்பற்ற பிரதிநிதிகளும் பங்குபற்றி தாம் சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇