மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்காத சாரதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைப்பாடுகளை 076 045 0860 என்ற இலக்கத்துக்கு அழைத்துத் தெரிவிக்குமாறு, மேல் மாகாண வீதி பொது போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிகள் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்தி ரத்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்கள், இரண்டாம் கிலோமீற்றரிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு 90 ரூபாவாகக் குறைக்கப்படுகிறது.
இன்று (15.07.2024) நள்ளிரவுடன் புதிய கட்டணத் திருத்தம் அமுலாகும் என்றும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் இக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇