இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் , எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தம்புள்ளையில் இப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இம் முறை மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

2022 ஆம் ஆண்டு 7 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இம் முறை அந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக நாடுகள் இத் தொடரில் பங்கேற்பதன் ஊடாக போட்டித் தன்மை அதிகரிக்கும் எனவும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும் எனவும் ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects