இந்த மாதத்தின் 28.03.2024 அன்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் 181,872 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து 28, 218 பேரும், ரஷ்யாவில் இருந்து 25,112 பேரும் ஜேர்மனியில் இருந்து 16,745 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇