மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை, இலக்கியத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் கவிஞர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. அதன் தலைவராக செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டதுடன் துணைத் தலைவர்களாக ஏ.எஸ்.பாய்வா, ரீ.எல்.ஜவ்பர்கான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் செயலாளராக எஸ்.அருளானந்தம், துணைச் செயலாளராக வல்லூர் பாரதி (க.முரளீதரன்), பொருளாளராக ஜே.எழில் வண்ணன் தெரிவுசெய்யப்பட்டார்.
நிருவாக உறுப்பினர்களாக வி.மைக்கல் கொலின், த.மலர்ச்செல்வன், வி.கமலநாதன், த.சாந்திக்குமார், திருமதி.ருத்ரகுமாரன், திருமதி நி.கிருஸ்ணராணி, சிவ.சற்குணானந்தம், சி.தரணீஸ்வராந்தா, த.சாந்திக்குமார் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










