ஆசியாவிலேயே அதிக சிறுத்தைப் புலிகள் அடர்த்தி கொண்ட காடு வில்பத்து தேசிய பூங்கா என தெரியவந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பூங்காவில் சுமார் 313 சிறுத்தைப் புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
131,690 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வில்பத்து நாட்டின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகக் கருதப்படுகிறது.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட வில்பத்து, புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பூங்காவாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇