லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (01.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று (01.04.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இதற்கமைய, அதன் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதன் புதிய விலை விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇