ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்றவிருக்கும் நிலையில், அது தொடர்பில் கனடாவின் ஒரு பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது. கனடாவைப் பொருத்தவரை, நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது.
பொதுவாகவே நயாகரா நீர்வீழ்ச்சியைக் காண மக்கள் ஏராளமானோர் கூடும் நிலையில், முழு சூரியகிரகணமும் சேர்ந்துகொள்ள இருப்பதால், அங்கு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகளை எதிர்கொள்ளும் வகையில், நயாகரா பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் திகதி, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட உள்ளது. எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒன்டாரியோ நகரின் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேயர் ஜிம் டியோடாட்டி, கிரகணத்திற்கு கனடாவில் “எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம்” என்று கணித்துள்ளார்.
ஒரு வருடம் முழுவதும் பொதுவாக வருகை தரும் 14 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ஒரு மில்லியன் மக்கள் அங்கு இருப்பார்கள் என்று டியோடாட்டி மதிப்பிட்டுள்ளார்.
வீதிகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பவர்கள் ISO 12312-2 தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇