ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் , இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு 16.12.2024 அன்று புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது , இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.
சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இராப்போசன விருந்து வழங்கினார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇