பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
03.04.2024 அ ன்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை கோரப்படும் என்றார்.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு குறைந்தது 19,000 அதிகாரிகளும் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு 25,000 அதிகாரிகளும் தேவை என அமைச்சர் குறிப்பிட்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇