சந்தைகளில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
இந் நிலையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்பானது நுகர்வோரை மிகவும் பாதித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலி பிரதான மீன் வர்த்தக நிலையத்தில் 1 கிலோகிராம் பலையா மீனின் விலை 1,300 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் 1 கிலோகிராம் கெலவல்லா மீனின் விலை 1,400 ரூபாவாகவும், 1 கிலோகிராம் டெலியா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇