பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை(05.04.2024) முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நன்மை கருதி இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 200 இற்கும் அதிகமான விசேடபேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இதேவேளை,பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇