கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புதிய ரயில் சேவைகளை இன்று (05.04.2024) புகையிரத திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு ரயில் சேவைக்கு துன்ஹிந்த ஒடிஸி என பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த சேவை கொழும்பு கோட்டையில் இருந்து இன்று (05.04.2024) காலை 6.30 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
துன்ஹிந்த ஒடிஸி சேவையின் பயணச்சீட்டு கட்டணம் 8,000 ஆகும்.
இந்த ரயிலில் தலா 44 இருக்கைகள் கொண்ட நான்கு அறைகள் உள்ளன. அதில் மூன்று இரண்டாம் வகுப்பு அறைகள் மற்றும் சிற்றூண்டிச்சாலையுடன் கூடிய மூன்றாம் வகுப்பு அறை ஆகியவை அடங்கும்.
இந்த ரயிலுக்கு மேலதிகமாக “கலிப்சோ” எனப் பெயரிடப்பட்ட மற்றுமொரு விசேட ரயில் குறித்த தினத்தில் பதுளை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த ரயில் சுற்றி முழுவதும் மறைக்கப்படாது விசேடமாக காட்சிகளை பார்வையிடக்கூடிய வசதி கொண்டது.
குறித்த ரயில் சேவையும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலிப்சோ ரயில், உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ரயிலிவல் பயணம் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் எடுக்கும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇