2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
14 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை தென்னாபிரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
பெரும்பாலான ஆட்டங்கள் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு போட்டிக்கான இடங்களை தென்னாபிரிக்க கிரிக்கெட் பேரவை தெரிவு செய்துள்ளது.
இதற்கிணங்க, Johannesburg இல் உள்ள Wanderers, Newlands, Pretoria வின் Centurion Park, Kingsmead, Gqeberha வில் உள்ள St George’s Park, Paarl-இல் உள்ள Boland Park ஆகிய 8 மைதானங்களில் உலக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
விமான நிலைய வசதி, தங்குமிட வசதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇