2019.04.21 அன்று உதிரம் சிந்தி உயிர் நீத்த உறவுகளின் 5 ஆம் ஆண்டு நினைவாக உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் s.சுஜீவாவின் தலைமையிலும், இளைஞர் சேவை அதிகாரி A. தயாசீலனின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இரத்த தான முகாமானது 21.04.2024 அன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி பெடினன்ஸ் மண்டபத்தில் காலை 08.00 முதல் மதியம் 02.00 வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்குப் பிரதேச பிரதேச செயலாளர் V. வாசுதேவன், சிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி மற்றும் கௌரவ அதிதிகளாக தாண்டவன்வெளி காணிக்கை அன்னை திருத்தலத்தின் பங்குததந்தை Rev. Fr. பிராசிஸ் ஜூலியன், முன்னாள் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி R. பிரபீன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி A. தயாசீலன், பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.
இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
சான்றிதழ்களை இருதயபுரம் கிழக்கு Youth In Action மற்றும் ஜெயந்திபுரம் முழுமதி இளைஞர் கழகங்களும், மரக்கன்றுகளை நாவலடி இளைஞர் கழகமும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇