ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடு பூராகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் நடைபெற்றது.
600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறைந்த வருமானம் பெறும் 156000 குடும்பங்களுக்கு இரு தடவை அரிசி பொதிகள் வழங்கப்படவுள்ளது.
புது வருட காலப்பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அரிசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரோஷ்மன் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇