மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து, மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் ஆட்டமிழப்பின்றி 195 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதனூடாக இங்கிலாந்து மகளிர் அணியின் சகலதுறை வீரர் நடாலி ஸ்கைவர் பிரண்ட்டை பின்தள்ளி, மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட தரவரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக சமரி அத்தபத்து, 2023 ஜூலை 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை குறித்த தரவரிசையில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇