இந்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் விவசாய புத்தாக்க வேலைத்திட்டத்திற்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
200 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறைந்தது 200 கிராமங்கள் இளைஞர் விவசாய தொழில் முயற்சி கிராமங்களாக அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குதல், நெற்பயிர்ச்செய்கைக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தல், நீர்ப்பாசனத்திற்கு தெளிப்பு நீர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், அதிக மகசூல் தரும் விதைகளை நடுதல் போன்ற பல திட்டங்களை இதன் கீழ் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇