தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளை நடத்துவதற்குத் தடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நடத்துவது ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,888 நிலையங்களில் இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை முடியும் வரை வகுப்புகளை நடத்த முடியாது. வகுப்புகள் நடத்துதல், கருத்தரங்குகள் , மாதிரித் தாள்களை அச்சிடுதல், சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுதல் , அச்சு அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

விதிமீறல்கள் குறித்து பொது மக்கள் பொலிஸ் அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது 0112 421 111 ஊடாக தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம். 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் அல்லது 0112 784 208 / 0112 784 537 ஊடாகவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects