ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்வதற்கு ஏற்கெனவே 712 பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும், அவர்களுக்கான தேர்வினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 07.08.2024 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஆயுர்வேத வைத்திய சபைக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைத்த பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்களில் 45 வயதுக்குட்பட்டோருக்கு எழுத்துமூல பரீட்சையும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய்மொழி மூலப் பரீட்சையும் நடத்தப்படும்.
கடந்த இரண்டு வருடங்களில் 552 ஆயுர்வேத வைத்தியர்கள் ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாரம்பரிய வைத்தியர்களின் பெயர்கள் பாரம்பரிய வைத்திய சபையில் பதிவு செய்யும் முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது பொய்யான செய்திகள் பரவி வருகின்றன என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அடுத்த சில வாரங்களில் பாரம்பரிய வைத்தியர்களுக்கான சோதனை நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் கூறியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇