அரச சுகாதாரத் துறையில் நிர்வாக உதவியாளர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட 213 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதன் பிரகாரம், நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 27.01.2026 அன்று கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்றது.
நாட்டு மக்களுக்கு உயர்தரம் மற்றும் சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் முன்கூட்டியே சுகாதார சேவையில் ஆளணி வளத்தை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





![]()










