மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்ள தடைகளை இனங்களை அவற்றினை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் 29.04.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஆகியோரின் இணைத்தலைமையிலும் இக் கூட்டம் நடைபெற்றது.
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அலிஸாஹீர் மௌலானா, சாணக்கியன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பலர் திணைக்கள தலைவர்கள், கிழக்கு மாகாணசபையின் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇