சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிறந்த சுய உதவிக்குழு, சிறந்த சுய சக்தி அங்கத்தவர் மற்றும் சிறந்த வீட்டு மட்ட பயனாளியை தெரிவு செய்வதற்கான நேர்முக தேர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 30.04.2024 அன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்ட குழு மூலம் நேர்முக தேர்வானது ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலிருந்தும் வருகை தந்த சுயஉதவிக் குழுக்களுக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர், மாவட்ட NSPD இணைப்பாளர், மாவட்ட முதியோர் செயலகத்தின் இணைப்பாளர், பிரதே செயலக அபிவிருத்தி உத்தியோத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇