மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் மாவிலங்கதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் மண்முனை காளியம்மன் ஆலயமும் ஸ்ரீ சித்தி விநாயகர், காளியம்மன் அறநெறி பாடசாலைகளும் இணைந்து நடாத்திய மாணவர்களுக்கான கலாசார கிராமிய விளையாட்டுப் போட்டி 28.04.2024 அன்று மாவிலங்கதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகௌரி தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு கலாசார கிராமிய பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் அவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇