பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் புதிய விசேட சுற்றுலா புகையிரதத்தை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த விசேட சுற்றுலா புகையிரதத்தின் பெயர் ‘கலிப்சோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
மலையக புகையிரத பாதை பதுளை வரை நீடிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த விசேட சுற்றுலா புகையிரதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ரயிலின் இசைக்குழு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலையும் முதல் நாளில் மட்டுமே செயல்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதன்படி, சில மாதங்களுக்குப் பிறகு, 01.04.2024 அன்று முதல் மீண்டும் ‘கலிப்சோ’ இசையையும், அனைத்து வசதிகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலையும் இயக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த ரயில் பதுளையில் இருந்து புறப்பட்டு, தெமோதரவில் 10 நிமிடங்களும், எல்ல 9 ஆர்ச் பாலத்தில் 10 நிமிடங்களும் நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு அப்பகுதியை காணும் வாய்ப்பை வழங்குகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇