திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவினரால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்லவுள்ள மற்றும் கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கான போதைவஸ்து தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமானது 09.05.2024 அன்று குச்சவெளியில் இறக்கக்கண்டி கிராமத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டுக்கு செல்லும் போது பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கிடையிலான போதைவஸ்து பாவனை அதனால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் இதில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதிலும் அளிக்கப்பட்டது.
இக்கூட்டமானது பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇