கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிறப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகள் அந்த சிறப்பு கண் வில்லைககளை வெளியில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நாட்டு மக்கள்தொகையில் இருநூறாயிரம் பேர் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) பேர் பார்வையை மீட்டெடுக்கும் திறன் பெற்றுள்ளனர்.
ஆனால், தேவையான கண் வில்லைகளுகள், தடுப்பூசிகள் மற்றும் இதர சத்திரசிகிச்சை உபகரணங்கள் இல்லாததால், உரிய அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கண் வில்லைகள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇