இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தமையினால் தொடர்ந்தும் நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை 700 ரூபாய் முதல் 800 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து, குறித்த தடையை இந்தியா நீக்கியதன் பின்னர் பெரிய வெங்காயத்துக்கான விலை குறைக்கப்பட்டிருந்தது.
தற்போது, பெரிய வெங்காயம் கிலோவொன்று 200 முதல் 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇