நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் 75மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்தே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருங்கவத்த பகுதியில் பெய்த கடும் மழையினால் குடியிருப்புக்களுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் சில இடங்களில் மண் மேடும் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇