இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய 1000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இவ்வாறான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான தகைமைகளைப் பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇