நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உணவு வகைகளுக்கான மாதாந்த செலவும் 2, 885 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உணவு அல்லாத பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை குறைவடைந்ததன் காரணமாக, பொது மக்களுக்கு 3, 145 ரூபாய் அனுகூலம் கிடைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇