மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவை வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்வு, நேற்று (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையிலும் இடம்பெற்றது.
நிகழ்வில் உத்தியோகத்தர்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றதுடன், பொன்னாடை அணிவிக்கப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வழியனுப்பி வைக்கப்பட்டார்.
நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.