கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் (12.09.2024) விடுவிக்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பீ திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அதன்படி, சிறு குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 350 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, கைதிகள் தினத்தை முன்னிட்டு, கைதிகளுக்குப் பார்வையாளர்களைத் திறந்த வெளியில் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇