பேராதனை பாலத்தின் ஊடாக புகையிரத போக்குவரத்து சேவைகள் ஏப்ரல் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பேராதனை பாலத்தின் ஊடாகச் செல்லும்  புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பாலம் டித்வா சூறாவளி காரணமாக  சேதமடைந்தது.

இந்த நிலையில், இப் பாலத்தின் ஊடான புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக்  குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டரை மாத காலப்பகுதிக்குள் 1,200 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் நாம் தற்போது இந்த இலக்கை எட்டியிருக்க முடியாது.

அத்துடன், டித்வா சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் வீதிகளில் 99 சதவீதமானவை தற்போது போக்குவரத்தை முன்னெடுக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளன.

இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும்.

பேராதனை பாலத்தின் புனரமைப்புப் பணிகள் பேராதனை பல்கலைக்கழகப் பொறியியல் பீடம் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. 

எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பாலத்தின் ஊடாக புகையிரத போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects