கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்திற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

யுனான் பல்கலைக்கழக உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குறித்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்குமிடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, குறித்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிருவாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர்.சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், விஜயத்தின் ஒரு அங்கமாக Confucius Unit நிலையத்திற்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.

மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects