கடலோர ரயில் பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
இதனால் கடலோர வழித்தடத்தில் ஒரு தண்டவாளத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியின் திருத்தப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇