2025ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் அப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது.
ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் அப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை 2025 மார்ச் மாதத்துக்குள் 200,000ஐ எட்டும்.
இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்கள் ஏற்கனவே 80,872 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்.
மேலதிகமாக அப்பிளுக்கான விநியோகஸ்தர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர் என அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இலத்திரனியல் துறையில் ஒவ்வொரு நேரடி வேலைவாய்ப்பும் மூன்று மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று இந்திய அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
இது அப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 500,000 முதல் 600,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇