அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக, தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் (Bailey Bridge) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான இந்த வீதியானது இப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீதியாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இப் பாலம் சேதமடைந்து முற்றாக அழிவடைந்திருந்ததால் அப்பகுதிக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இந் நிலையில், பெய்லி பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் 27.12.2025 அன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள பணிகளை மிக விரைவாக நிறைவு செய்து, மக்களின் பாவனைக்காகவும் வாகனப் போக்குவரத்திற்காகவும் பாலத்தைத் மீண்டும் திறக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










